அந்த சவரக்கடையின் கண்ணாடிகளில்
ஒரு எண்ணின் பெரிய அடுக்காய் பெருகியிருந்தது
என் பிம்பங்கள்.
அத்தனைமுறை பிரதிபலித்தபோதும்
நல்லவேளை நான் யோசிப்பவற்றை காட்டிக்கொடுக்கவில்லை
பின்,
என்னையே பல என்னால் பார்த்தேன்
சரிசெய்துகொண்டேன் கலைந்திருந்த எனக்கான வசீகரிப்புகளை.

Advertisements

உனைப்பற்றிய சிற்ச்சில வசிகரத்தில்
லயிக்கத் தொடங்கியது என் கவனிப்புகள்.
பிரமாண்டமாக வளர்ந்துநின்றது உனைப்பற்றிய அனைத்தும்.
அது நிச்சயம் காதல் அல்ல
ஒரு பெண்மைக்கான அங்கிகாரம்மட்டுமே.
சகிக்கமுடியாத உன் செய்கைகளின்பின்
உன் பிம்பங்களை வளர்த்துநின்ற மனதில்
அன்று
நீ பேசும்போது
CNN தலைப்புச்செய்தியோன்று
நினைவில் வந்து மறைந்தது.
கைவிடப்பட்டவைகளை
கைவிடப்படப்படாதவைகளாய் மாற்றமுடிவதில்லை அவ்வளவு எளிதில்!

 

உனைப் பற்றிச் சொல்ல
குறிப்பாய் ஒன்றுமில்லை
ஆனால்
எப்படியும் பார்த்துவிட நினைக்கிறேன்
முட்டிமோதி பஸ்சில் ஏறிய பின்னும்
கலையாமல் உன் முகத்தில் அப்பியிருக்கும்
எனக்கான அந்த சிரிப்பை

எல்லோருக்கும் எட்டப்பார்த்தால் வானவில்,
எனக்கு மட்டும்
என் கையருகில்…
நீ

 

பலகீன ஒளி இருளில் 
உன்னைப்பற்றிய ஏதோ ஒன்று கசிகிறது
மேலும் மேலும் கசிந்து
என்னை முழுகிவிட முயல்கிறது.
வெளியில் பெரும் நிசப்தம்
உள்ளே பேரிரைச்சல்.
ஒவ்வொரு நாளும்…
நீயும் எனை விரும்புகிறாய் என்று தெரிந்த நாள் முதல்
சகஜமாகிப்போனது எல்லாமே!

உனைப்பற்றிய ஒவ்வொரு துகளாய் சேர்த்தேன்
உன் வெட்கம்
சிரிப்பு
கவனிப்பு
கொஞ்சல்களென
இவைஅனைத்தும்வைத்து
கொஞ்சங்கொஞ்சமாய்
எதையோ கட்டிக்கொண்டிருந்தேன்
கடல் மணலில் கோபுரம்கட்டிய குழந்தை போல்
ஒரு பரவசம் பொங்கி படர்ந்துகொண்டிருந்தது
அன்று வேறொருவனுடன் உனை பார்க்கும்வரை.
அப்புறம்
மிகவும் அந்நியமாகிப்போனது
நான் கட்டியது.
உள்ளே நான் வாழவுமில்லை,
இடிக்கவும் மனமில்லை,
நினைவுச்சின்னமாக்கவும்முடியவில்லை.
விட்டு வந்துவிட்டேன்.

முதலில் உனை எப்போது பார்த்தேன் என்ற நினைவேயில்லை
பொருட்படுத்தவுமில்லை.
கவனிக்கவைத்தாய்
காதலென்ற எதையோ என்னுள் புகுத்தினாய்
புகுத்தி
ஏங்கவைத்தாய்
உயிரை மட்டும் உனக்கேற்ற முறுகலாய் கருக்கினாய்
விழித்து வக்கிரத்தால்
கொஞ்சம்கொஞ்சமாய் உப்புப் படிகமாகி
உனை மறக்க நினைத்தபோது
எதுவும் தெரியாததுபோலவே கொஞ்சி
எனை உன்னுள் கரைத்தாய்.
மீண்டும் மீண்டும் உப்பாகிறேன்
மீண்டும் மீண்டும் கரைகிறேன்.
இப்போதும்
சகஜமாய் பழகி
தூரமாய் போய் மறந்துவிடும் நண்பர்களகிவிடலாம்
என்ன சொல்கிறாய்?

உன்னுடன் பழகும் நூறு நண்பர்களில்
ஒருவனாய் இருக்கமுடியாது இனிமேலும்.
உனக்கான
புவியீர்ப்பை மீறிய என் காதலை
சிலருடன் போட்டியாக விடவும்முடியாது.
இப்போது,
இலையைத் தின்று முடித்து
காம்பு நோக்கி நகரும் புழு நான்,
செடியாய் வளர்ந்துநிற்கும் இந்த காதலை
என்ன செய்ய?
முழுவதையும் தின்றுவிடவா?
பட்டாம்பூச்சியாய் பறந்துவிடவா?
அல்லது
பூச்சிகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளவா?

அந்த ஒரு வரியை வாசித்தான்
ஏதோ ஒன்று இழுத்தது அதனுள்ளே
மீண்டும் மீண்டும் தன்னுள் ஒலிக்கவிட்டான்
அவனுள் அது வளர்ந்தது
அப்போதுதான் உணர்ந்தான்
அது அவனின் வாழ்நாள் கர்பமென்று
மீண்டும் தன்னுள் ஒலிக்கவிட்டான்
அது அவனில் முடிவிலாத அர்த்தங்களை உருவாக்கியது.
அர்த்தங்களை இழந்து
அவன் மனதுடன் ஒத்ததிர்ந்து* பேரலையானது.
யாரும் கவனிக்காத பின்னொருநாளில்
ப்ரம்மமானான்.

* ஒத்ததிர்தல் – Resonance

This poem is inspired by கீதை அகம்.
நன்றி: ஜெயமோகன்.

சரியான இருட்டு அது
தினமும் பகலை முழுமையாக கடித்து தின்றது.
என் அறையின் ஓரமாய் ஒளிந்திருந்த
மஞ்சள் வெளிச்சத்தையும் சேர்த்து தான்.
இருட்டின் வக்கிரம் குறைய ஆரம்பித்ததே
பகலை தின்றுவிட்டேனென்று நினைத்தபோதுதான்.
களைப்பில்
கொஞ்சம் தூங்கிவிட்டது.
விழித்து பார்க்கும்போது
பகலும் மீள முயற்சித்தது
நேற்று தோற்றதால் ஏற்பட்ட வக்கிரத்தால் ஜெயித்துவிட்டது!
இருட்டுக்கு இன்னமும் தெரியவில்லை
முழுசாய் பகலை தின்றுவிட்டேனென்று நினைத்தால்தான் அது தோற்றதென்று
பாவம் அந்த இருட்டு!

 

அழுதுகரைத்த உன் ஞாபகங்கங்களின்
ஒவ்வொரு துளியும் பெருகி
சகிக்காத ஒரு சிவப்பு ஆறாய்
என் எல்லா பாதைகளின் ஓரங்களிலும்
துரத்தி வந்தது

முதலில் மிரட்டியது
மிரண்டேன்
கட்டளையிட்டது
அடிபணிந்தேன்
பிறகு,
களிம்பு பூசிவிடும் நண்பனானேன்
கொஞ்சம் விழித்தேன்
அதன்பின்
கவனிப்பிற்காகவும் பிறகு அன்பிற்காகவும் கெஞ்சியது
உதசினப்படுத்தினேன்
அழுதது.
இப்போது,
சிறு பையன்கள் மூத்திரம் போகும் சாக்கடையானது

 

புத்தன்போல் புலனடக்கி
புலன் தட்டி உணர்த்தும் அனைத்தும் அடக்கியபின்
தனிமையின் உக்கிரம் நிரம்பியிருக்கும்
நிசப்த இருட்டில்
மழைக் காலத்து காளான்களாய்
முளைத்து விடுகின்றன
உன் எண்ணங்கள்,
வழக்கத்திற்கும் அதிகமாக…

கோவில் பிரகாரத்து இருட்டின்
ஒற்றை அகல் விளக்காய்
மனம் முழுக்க நிறைந்து
கண்களில் வழியும் என் காதலை
மொழிகள் தோற்றுப்போன இடத்தில்
வார்த்தைகளில் சொல்லவும் வேண்டுமா?

நிதானமாய் பலநாட்கள் யோசித்து
திடமான ஒருமுடிவென்று நினைத்துதான்
அன்றைய இரவில்
குளிரில் விரல்கள் எரிய
ஆழமாய் புதைத்தபின்
காலையில் முளைத்துநிற்கும் உன்மீதான என் காதலை
நீரூற்றி வளர்க்காமல்
என்ன செய்ய?

அவசரமாக சோப்புபோட்டு முகம் கழுவி
உடைமாற்றி
தலைசீவி
இரண்டுமுறை கண்ணாடி பார்த்து
எல்லாம் சரிசெய்தபின்
நீ வரவில்லை என்று தெரிந்ததும்
விகாரமாய் இருந்தது எல்லாமே!

உனைக்குடித்து மயங்கி
இரவுகளில் பலநாள் இறந்திருக்கிறேன்.
தியானத்திற்கும் விழிப்பிற்கும்
இடைப்பட்ட வெளிதான் உன் நினைவு.
எவ்வளவு கரைத்தாலும் கரையாத
அந்த உன் ஒரு துளி நினைவுதான் இப்போதும்
உன் கைக்குச் சிக்கக்கூடிய ஜெடப்பொருளாய்
எனை வைத்துள்ளது.
தயவுசெய்து உயிர் கொடு
அல்லது
கரையாத உன் ஞாபகங்களை எடுத்துச்செல்

A shawl over the backrest,
A fire ready to light
A book on the table,
On the chair my Grandma’d wait.

As I returned from my play
She’d spring up with delight
And serve hot supper
And tell stories into the night.

I grew up under her care
And constant supervision.
Back then all I wished for
Was to realize my ambition.

So I spread my wings
And ran away
Leaving back the meadows
And my Grandma astray.

I wanted to achieve
I wanted a life
Without grudge and redemption
I started my strife.

I forgot my Grandma
Now crippled to the knee
For now my entire life
Was just about me.

I thought I’d achieved
Everything I’d craved
Yet at night,
No tear would be saved.

I looked back longingly
At those nostalgic days of yore
Of time with my Grandma
I yearned for more.

So ten years later
I trudge up the meadow
Quickening my pace
As I reach my Grandma’s bungalow.

A shawl over the backrest,
A fire ready to light
A book on the table,
On the chair – A void.

Anusha Srikanth, PhD
MPI, Tuebingen, Germany

முதலில் ஒரு படம் பார்க்கும்போதுதான் தோன்றியது,
எப்படித்தொடங்குவதுவதென்று தெரியாமல்
கொடுக்க நினைத்த ஒரு முத்தத்தை யோசிக்கையில்

முதலில் கையில் தொடங்குவதாய்
பிறகு,
கன்னம்
பிறகு,
உதடுவென தீர்மானம் செய்துகொண்டேன்.
ஏதோ பேசிக்கொண்டிருந்தபோது
எட்டி என் உதட்டில் நீ முத்தமிட்டபோது
எல்லாமே சிறிதுநேரம் மறந்துவிட்டிருந்தது!
என்னசெய்ய என் யோசனைகளை?

தனிமை கனமாகிவிட்டபோது
அருகேயிருந்தாய் யாரோ நீ!
எனக்கான உன் செய்கைகளின்
ஒருபுள்ளி ஞாபகம் மேல்
தியானம்போல் குவிந்திருக்கிறது மனம்.
பிறகு விரிவடைந்து
நமக்கான ஓர் இடத்தை உருவாக்கி
திரிக்கப்பட்ட உன் நினைவுகளை
நிரப்பி பல்கசெய்து
காத்துக்கிடக்கிறது.
காத்துக்கிடக்கிறது காத்துக்கிடக்காமல்
என் வழக்கமான செய்கைகளில்
செயற்கைத்தனம் கொஞ்சம்கூட்டி
உனக்கு அப்பட்டமாய் காட்டிவிடும்…
தெரிந்து நீ விலகுகையில்
அகால மரணமடைந்திருக்கும்
என் மனம்.
பிறகு காத்திருக்கும்
அடுத்த தனிமைக்காக

சிலமுறை துவைத்தபின்னும்
அழியாத சட்டை மையாய்
சில காலம் வாழ்ந்துபோகிறது
உன் ஒவ்வொரு ஞாபகமும்.

Third eye

Stat

  • 10,726 visitors

Visitors

Visitors

Advertisements