நண்பர்களுடனான அன்றைய பயணத்தில்
திரும்பக் கூப்பிட
அவள் கொடுத்த மிஸ்டு காலின்பின்
சிக்னல் தீர்ந்த 500 மீட்டர் தூரத்தில்
வேகமாய் போக
பஸ் டிரைவரையும்
டென்ஷன் தெரியாமல்
ஜோக்கடிக்கும் நண்பனையும்
டவர் வைக்காத
செல்போன் காரர்களையும்
திட்டி தீர்த்து,
சிக்னல் கிடைத்தபின்
நான் தொடர்புகொண்ட வாடிக்கையாளர்
தொடர்பிலக்கிற்கு வெளியே இருப்பதாய்
சொல்லும் ரெக்கார்டடு மேசேஜிக்கப்பறம்
காலருகில் கூடை வைத்ததற்க்காய்
மோர்கார பாட்டியை திட்டியதும்
நடப்பதற்கு வழிவிட்டு ஓரமாய் வைத்ததாய்
மன்னிக்கும்படி அவள் சொல்ல,
நான் சாரி சொல்லிவிட்டு
ரெண்டு ரூபாய்க்கு மோர் வாங்கி குடித்தபின்தான்
தணிந்தது
என் கோபமும்
பாட்டியின் இறுக்கமும்.

Advertisements