You are currently browsing the monthly archive for November 2008.

மனம்

நீர் கோர்த்த கண்களை
கண்ணாடியில் பார்க்கமுடிவதில்லை
அதே கண்களால்.

 

பிரிவு

பிரிந்துவிட்டனர்
நெருக்கமாயிருந்த
அவனும் அவளும்,
உடைகளணிந்தபிறகு.

 

வெற்றி/தோல்வி

காதலித்தவள்
திருமணம்செய்துகொள்ளவில்லை.
புரியவில்லை அவனுக்கு
காதல் வெற்றியா? தோல்வியா?

Advertisements

நண்பர்களுடனான அன்றைய பயணத்தில்
திரும்பக் கூப்பிட
அவள் கொடுத்த மிஸ்டு காலின்பின்
சிக்னல் தீர்ந்த 500 மீட்டர் தூரத்தில்
வேகமாய் போக
பஸ் டிரைவரையும்
டென்ஷன் தெரியாமல்
ஜோக்கடிக்கும் நண்பனையும்
டவர் வைக்காத
செல்போன் காரர்களையும்
திட்டி தீர்த்து,
சிக்னல் கிடைத்தபின்
நான் தொடர்புகொண்ட வாடிக்கையாளர்
தொடர்பிலக்கிற்கு வெளியே இருப்பதாய்
சொல்லும் ரெக்கார்டடு மேசேஜிக்கப்பறம்
காலருகில் கூடை வைத்ததற்க்காய்
மோர்கார பாட்டியை திட்டியதும்
நடப்பதற்கு வழிவிட்டு ஓரமாய் வைத்ததாய்
மன்னிக்கும்படி அவள் சொல்ல,
நான் சாரி சொல்லிவிட்டு
ரெண்டு ரூபாய்க்கு மோர் வாங்கி குடித்தபின்தான்
தணிந்தது
என் கோபமும்
பாட்டியின் இறுக்கமும்.

கடல்கள் தாண்டிய காதலில்
கோவில் பிரசாதம் போல
பாதுகாக்கப்படும் உனைபற்றியவைகளில்
ISD கால்களின்பின்
Call log-ல் இருக்கும் உன்பெயரைத்தவிர
உனை சார்ந்தவையாய்
எதை சேர்த்து வைக்க?

 

 • இத்தனை காலம்
  கலங்கரைவிளக்கமாய்
  உனை தேடிக் கண்டுபிடித்தபின்
  நங்கூரம் தொலைத்த படகாய்
  எப்படி கைநழுவ விடுவது?
“I would rather have had one breath of her hair, one kiss from her mouth, one touch of her hand, than eternity without it.” 
– Seth (Nicolas Cage), City of Angels (1998).
 
 • கையிலகப்படாத அவள் ஸ்வாஸத்தைதவிர
  சிரிப்பையும் சேர்த்து
  தொலைக்கமுடியாத
  அத்தனையும்
  அவளாய் இருந்தது அவனிடம்… 
Take love, multiply it by infinity and take it to the depths of forever.. and you still have only a glimpse of how I feel for you.”
– William Parrish (Anthony Hopkins), Meet Joe Black (1998).
 
 • மலைப் பாதையின் வளைவுகளில்
  பயணிக்கும் ரயிலை இன்றும்
  திரும்பிப் பார்க்கிற நான்
  எப்படித் தொலைப்பேன்
  உன்மீதான காதலை? 
“You… complete me.”
– Jerry Maguire (Tom Cruise), Jerry Maguire (1996).

அவசரமாய் ஆம்புலன்ஸில் வந்து
எமர்ஜன்சி வார்டில் சேர்த்தபின்
உயிரை மீட்க வந்த உறவுகள்
மருத்துவமனையை பார்த்து
அமர்ந்திருந்த அந்த
வினை தீர்க்கும் விநாயகரிடம்
கதறி அழுது
காலில் விழுந்து
கெஞ்சினாலும்
அவர் சட்டை செய்வதே இல்லை.

அருகிலிருக்கும் எஸ்.டீ.டி பூத்தின் ரிசிவரில்
அவரின் காதுபட
கதறல்களையும்,
அழுகுரல்களையும்
அனுப்பிக்கொண்டே இருந்தாலும்
அவர் கொஞ்சமும் வருத்தப்படுவதில்லை.

உறவுகளின் உடல் நோவு தீர்க்கச் சொல்லி
க்யூவில் நின்று
மன்றாடும்போது
அவர் பார்ப்பதுகூட இல்லை

மாலை போட்டு
படையல் வைத்து
உண்டியலில் காசு போட்டாலும்
அவரை மாற்றமுடிவதில்லை!
பக்கத்து தெரு அருள்மிகு மீனாட்சி அம்மனும்
அப்படித்தான்.
கடவுள்கள் கறாரானவர்கள்!

கடவுள்கள் நாத்திக்கர்கள்!
மனிதர்களைவிட
கொள்கைகள் மட்டும்தான்
முக்கியம் அவர்களுக்கு.

தாக்கம்: கல்பற்றா நாராயணின் முரண்டு,
மொழிபெயர்ப்பு: ஜெயமோகன்.


Third eye

Stat

 • 10,726 visitors

Visitors

Visitors

Advertisements