தனிமை கனமாகிவிட்டபோது
அருகேயிருந்தாய் யாரோ நீ!
எனக்கான உன் செய்கைகளின்
ஒருபுள்ளி ஞாபகம் மேல்
தியானம்போல் குவிந்திருக்கிறது மனம்.
பிறகு விரிவடைந்து
நமக்கான ஓர் இடத்தை உருவாக்கி
திரிக்கப்பட்ட உன் நினைவுகளை
நிரப்பி பல்கசெய்து
காத்துக்கிடக்கிறது.
காத்துக்கிடக்கிறது காத்துக்கிடக்காமல்
என் வழக்கமான செய்கைகளில்
செயற்கைத்தனம் கொஞ்சம்கூட்டி
உனக்கு அப்பட்டமாய் காட்டிவிடும்…
தெரிந்து நீ விலகுகையில்
அகால மரணமடைந்திருக்கும்
என் மனம்.
பிறகு காத்திருக்கும்
அடுத்த தனிமைக்காக

Advertisements