என்னோட பிரண்ட்ஸ் கூட ஒரு சினிமா பாக்கபோய்
அதுல உன்னமாதிரியே ஒரு கேரக்டரை பாத்தப்ப
எப்டியும் உன்ன பாத்தே ஆகனும்னு
பிரண்ட்சுங்ககிட்ட சாரி சொல்லிட்டு
உடனே கெளம்பி பஸ்சுல
ஜன்னல் பக்கத்துல ஒக்காந்த அந்த ஒரு செகண்ட்லந்து
3 மணிநேரம் ஒரு பெரிய ட்ரீம் அடிச்சு
உன் ஊர் வந்து ஏறங்கினப்ப
என்ன மொரச்சிபாத்து கண்டபடி திட்டி அனுப்பன நீதானா
இன்னக்கி உன் பிரண்ட்சு எனக்கு காய்ச்சல்னு பொய் சொல்றாங்கனு தெரிஞ்சப்பறமும்
நைட்டுனும்பாக்காம, போனும்பண்ணாம
என்னப்பாக்க அதே 3 மணிநேரம் கெளம்பிவந்துட்டு
ஏதோ அவசரவேலையா வந்ததா பொய்சொல்லிட்டு
காபி குடிச்சப்பறம் முத்தம் குடுத்துட்டு போய்ட்ட?

உன் பிரண்டு போன்பண்ணி விஷயத்த சொன்னப்ப
காபிபட்ட உன் உதடோட டேஸ்டு இன்னும் பயங்கர இனிப்பா இருந்திச்சு,
ஊம்மேல அதிகமா லவ்தான் வந்துச்சு.

ஆனா என்னமட்டும் ஏன் அன்னிக்கு திட்டுன?

Advertisements