நிசப்தநேரங்களில்
வந்துபோகும் உன் எண்ணங்களே கனத்த சத்தமாயிருக்கிறது
உன் இழப்பின் அடர்த்தியை விடவும்
உன் ஞாபகங்களின் இறைச்சல் ஜிவாளைட்டு எரிந்துகொண்டிருக்கிறது
உன் ஞாபகம் நிறைந்த பாடல்களை
கேட்கவும், நிறுத்தவும் முடியவில்லை
உன் கிருமி தாக்கிய உறுப்பாய் என் மனமும் எண்ணங்களும்.
மறக்கமுடிந்த நினைவாய் ஏனில்லை நீ?

Advertisements