உன் பயணச்சீட்டு
உன் எச்சில் பருக்கை
நீ சீவிய சீப்பு
நீ பிடித்த பேனா
நீ சொல்லும் ‘All the best’-களை
சேகரித்த பின்னொருநாளில் மணம்முடித்தோம்.
சில வருட கொஞ்ஜல்களின் பின் இப்போதெல்லாம்
ஒரே வீட்டிலிருந்தாலும்
நம்மிருவருக்குமான நேரம் மெல்ல இறந்துவிட்டிருக்கிறது
வேலைகள் முடிந்தபின்னும் ஏதோ வேலையில் நான்.
பேச நேரம் இருந்தாலும்
தலைப்பு நினைவிலில்லாத புத்தகத்தில் என் கண்கள், மனம் வேறெங்கோ!
என்மீது உனக்கான உமிழ்தல்கள் இன்னும் அதிகமிருக்கலாம் அல்லது
என்னை உருக்கிவிடும் அமிலத்தை
உன் மனம் உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.
மரத்தின் காய்ந்த இலையாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது
எப்படியோ பழசாகிவிட்ட நம் உறவு!
காதலின் ஊடல்களைவிட
அந்தரங்கத்தின் வலி மிகுந்தது நம் திருமணம்.

Advertisements