பலத்த மௌனம் படர்ந்துகொண்டிருந்த
அந்த கணத்தின் முடிவாய்
கம்மிய குரலில் தெரிந்தது
உன் உடைந்த இதயத்தின் விரிசல்கள்.
நான் சொல்லாமலிருந்திருக்கலாம்
உன் ஜீன்ஸ் தோழியின் இடுப்பு இடைவெளியில் தெரிந்த
கோதுமை நிறத்தின் வசீகரத்தை.

Advertisements