நிலா வர மறுத்த ஒரு மாலையில்
பேசத் தயங்கி பார்வைகள் மட்டும் பரிமாறிக்கொண்ட
நம் உறவின் தொடக்க நாள் தொடங்கி
படிக்க விரும்பாத புத்தகங்களை கடன்வாங்கிய நாட்களின் பின்
தொலைபேசிகளில் இரவு கழித்து
மச்சங்கள் எண்ணி வியர்வைகளை பரஸ்பர உடல்களில் துடைத்த நாட்கள் தொடர்ந்து
பேச்சுக்கள் அற்றுப்பிரிந்து போகும் சண்டை நாட்களில் உணர்கிறேன்
காதல் கசக்குமென்று

Advertisements