தெரியாமல் என் தோள் பார்த்து தொட்டுவிட்டாய்
சிணுங்கிவிட்டு என் கவனிப்பை உறுதிபடுத்திக்கொண்டாய்
சட்டை பொத்தான் போட்டு என் மார் வருடிக்கொண்டாய்
நடக்கையில் கைகலுரசும்போதைய என் மௌனத்தை கவனித்துக்கொண்டு,
முத்தங்கள் முடித்தபின் உன் சிவந்த கண்ணில்
என் கண்களை மாறிமாறி பார்த்துக்கொண்டாய்
ஏககாலத்தில் இத்தனையும் தாண்டி நடந்துகொண்டிருக்கையில்
நொடிப்பொழுதில் விலகி
திரும்பிப்பார்க்காமல் போகிறாய்
திரும்பியிருக்கலாம்
திரும்ப விரும்பவில்லையோ என்னவோ.

Advertisements