நாடு கடந்தபின்,
பல வெள்ளி இரவுகளின் போதை நிமித்தங்களில்
தெரிந்துதெரியாத பெண்களுடன் ஒன்றுகூடி
முகம் உரசி ‘ஹாய்’ சொல்கையில் தொடங்கி
இடைபிடித்து
போதைப்போக்கில் பெயர்தெரியாத இசைக்கு நடனமாடியபின்
முதுகுகள் தேய்த்து, முத்தமிடுதல்கள் வரை பழகிவிட்டிருந்தது!
உள்ளூர் கல்லூரியில் கைகொடுக்கத் தயங்கியவனிடம்.

-elementgandhi@yahoo.co.in

Advertisements