பள்ளி வயசில் வானவில் நோக்கிய சைக்கிள் பயணம்
இன்று அவளை சந்திக்கவேண்டி காரில்
இரண்டின் பயணத்திலும் அதே பரவசம்
கிட்டத்தட்ட நிலவுக்குப் போகும் ஆம்ஸ்டிராங் போல
நெருங்கியதும், கடந்ததும் தெரியாமல்
வழிபட்டு திரும்பும் பக்தன் போல
மறதியாய் எங்கே வைத்தேன் என் கண்களை?
அப்போதும், இப்போதும்.

Advertisements