அன்று விழித்தது வானம்மட்டுமல்ல அவனும்தான்.
அவன் முகத்தில் தெறித்த நீர் தன்னை சுத்தமாய் உணர்ந்தது
நீர் வடியும் முன் காதல் வடிந்திருந்தது.
நேற்றைய வலியும் மறுத்திருந்தது.
அதிகம் விரும்பிய சில விஷயங்களையும், ஒரு இதயத்தையும் மறந்தான்
தற்போதைய இதயத்தில் அதே பழைய கனப்பு
அன்றிலிருந்து பிடித்தது
அவனுக்கு உழைப்பும்
வெற்றிக்கு அவனையும்.

Advertisements