ஒரு மழைநாளில்என் தெருவாசியான அந்த நாய்
செம்மண் நிறத்தில் ரெண்டு,
கருப்புவெள்ளையாய் ஒன்று
பெயர்தெரியாத நிறத்தில் மூன்றென
ஆறு குட்டிகள் ஈன்றிருந்தது.
ஒருநாள் ஆபீஸிலிருந்து திரும்பும்போது,
கருப்புவெள்ளை குட்டி
எதனாலேயோ இறந்திருந்தது.
செய்தித்தாள்களின் விளையாட்டுச் செய்திபோல்
விரும்பாமலும் கண்ணில் பட்டுத்தொலைத்தது.
அதைப்பார்த்த அவள்
சிலநாள் பாசத்திற்கு
வீடுவந்ததும்
தேம்பி அழுதாள்.
மணி பார்த்தவுடன்
மணி பார்த்தவுடன்
கண்துடைத்து
வெங்காயம் வாங்கிவரச்சொல்லிவிட்டு
சமைக்கச்சென்றுவிட்டாள்.
வெங்காயம் வாங்கித் திரும்புகையில்
எங்கேயோ போயிருந்த
எங்கேயோ போயிருந்த
இறந்துப்போனதின் அம்மா
வந்து
வந்து
அதை முகர்ந்துவிட்டு
அதற்கான உணவை
சாப்பிடச்சென்றுவிட்டது.
வீடுவந்ததும்,
கத்தரிக்காய் வதக்கிக்கொண்டிருந்த
அவளின் சேலை வசீகரமாய்
விலகி இருந்தது.
வெங்காயம் கொடுத்துவிட்டு
காதோரமாய் முத்தமிட்டதும்
வெட்கப்பட்டாள்.
ஏதோ டிவியின்
வானிலயறிக்கையில்
நாளை மீண்டும் மழைவருமென்றது.


4 comments
Comments feed for this article
December 8, 2008 at 7:31 am
அனுஜன்யா
காந்தி,
எனக்குப் பிடிச்சிருக்கு. வார்த்தைகளை இன்னும் சிக்கனமாகக் கையாண்டால், கதை சொல்லும் தொனியிலிருந்து கவிதை இன்னும் வாசமாயிருக்கும் என்று நினைக்கிறேன். என்னாலும் பல சமயங்கள் முடிவதில்லை. கருத்து கவிதையாக, அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
December 8, 2008 at 7:44 pm
TKB Gandhi
நன்றி அனுஜன்யா,
உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. வார்த்தைகளை சிக்கனமாக எழுத முயல்கிறேன், இப்போதானங்க கவிதை எழுதவே கத்துகிட்டிருக்கேன், முழுசா அழகா எழுதுறத்துக்கு இன்னும் நாள் ஆகும்ன்னு நெனைக்கறேன்
காந்தி
December 9, 2008 at 7:14 am
Pradeep
Kadaisi 2 varigal…. ’sethaan edhiri’ nu irukkudhu…
May 19, 2009 at 3:19 am
cheena (சீனா)
அன்பின் காந்தி
அருமை அருமை கவிதை – மழைநாளினை மகிழ்வுடன் எதிர் நோக்கும் கவிதை.
மழை நாள் – நாய் ஆறு குட்டி போடுகிறது – மகிழ்ச்சி
மாலையில் ஒரு குட்டி இறக்கிறது. விரும்பாத போதிலும் கண்ணில் படுகிறது. மனைவியோ – சில நாட்கள் பழகியதனால் – சில நிமிடங்கள் பாசம் பொங்கும் துக்கம் – பிறகு சமையல். குட்டியின் தாயோ இயல்பாக முகர்ந்து பார்த்து விட்டு சாப்பிடச் சென்று விட்டது.
நாமோ , வீடுவந்ததும்,
கத்தரிக்காய் வதக்கிக்கொண்டிருந்த
அவளின் சேலை வசீகரமாய்
விலகி இருந்ததைக் கண்டு
வெங்காயம் கொடுத்துவிட்டு
காதோரமாய் முத்தமிட்டு
வெட்கப்பட்ட துணைவியின் சுகம் கண்டு
மறு நாளும் மழையினை எதிர் நோக்குகிறோம்.
யதார்த்தமான கவிதை – எளிய சொற்களில் விவரித்திருப்பது அருமை.
நல்வாழ்த்துகள் காந்தி