You are currently browsing the monthly archive for December 2008.
ஒரு மழைநாளில்என் தெருவாசியான அந்த நாய்
செம்மண் நிறத்தில் ரெண்டு,
கருப்புவெள்ளையாய் ஒன்று
பெயர்தெரியாத நிறத்தில் மூன்றென
ஆறு குட்டிகள் ஈன்றிருந்தது.
ஒருநாள் ஆபீஸிலிருந்து திரும்பும்போது,
கருப்புவெள்ளை குட்டி
எதனாலேயோ இறந்திருந்தது.
செய்தித்தாள்களின் விளையாட்டுச் செய்திபோல்
விரும்பாமலும் கண்ணில் பட்டுத்தொலைத்தது.
அதைப்பார்த்த அவள்
சிலநாள் பாசத்திற்கு
வீடுவந்ததும்
தேம்பி அழுதாள்.
மணி பார்த்தவுடன்
மணி பார்த்தவுடன்
கண்துடைத்து
வெங்காயம் வாங்கிவரச்சொல்லிவிட்டு
சமைக்கச்சென்றுவிட்டாள்.
வெங்காயம் வாங்கித் திரும்புகையில்
எங்கேயோ போயிருந்த
எங்கேயோ போயிருந்த
இறந்துப்போனதின் அம்மா
வந்து
வந்து
அதை முகர்ந்துவிட்டு
அதற்கான உணவை
சாப்பிடச்சென்றுவிட்டது.
வீடுவந்ததும்,
கத்தரிக்காய் வதக்கிக்கொண்டிருந்த
அவளின் சேலை வசீகரமாய்
விலகி இருந்தது.
வெங்காயம் கொடுத்துவிட்டு
காதோரமாய் முத்தமிட்டதும்
வெட்கப்பட்டாள்.
ஏதோ டிவியின்
வானிலயறிக்கையில்
நாளை மீண்டும் மழைவருமென்றது.
ப்ராஜெக்ட் முடிக்க
ஓவர் டைமில் வேலைசெய்து திரும்பும் அவள்
பேச்சுத்துணைக்கு போன் செய்திருந்தாள்.
வழிதோறும் நடந்தவைகளை
ஒலிபரப்பிக்கொண்டிருக்கையில்
எதிர்ப்பட்ட
நொண்டி பிச்சைக்காரன்,
பீடி பிடிக்கும் ஆட்டோக்காரன்,
மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்
மேல் பட்டன் போடாத எவனோஒருவனென
எவருமே
நல்லவராய் தெரியவில்லையெனக்கு
அவள் வீடு சேரும்வரை.
அன்றொருநாள்
இரவு பதினொரு மணிவாக்கில்
இளஆரஞ்சு நிற சுடிதாரணிந்து
மாநிறமாய்
நீள்வட்ட முகத்தில்
அழகிய உதட்டுடன்
எனைப்பார்த்ததும்
மிரண்டு வேகமாய் நகர்ந்த எவளயோ
எதேச்சையாய் நினைவுக்கு வந்தது.
சட்டென்று
இந்த இரு சம்பவத்துக்கும்
சம்பந்தமில்லையென்று சொல்லிக்கொண்டது
உள்ளிருந்து ஏதோ
- உயிரோசையில் பிரசுரமான கவிதை

