அவசரமாய் ஆம்புலன்ஸில் வந்து
எமர்ஜன்சி வார்டில் சேர்த்தபின்
உயிரை மீட்க வந்த உறவுகள்
மருத்துவமனையை பார்த்து
அமர்ந்திருந்த அந்த
வினை தீர்க்கும் விநாயகரிடம்
கதறி அழுது
காலில் விழுந்து
கெஞ்சினாலும்
அவர் சட்டை செய்வதே இல்லை.
அருகிலிருக்கும் எஸ்.டீ.டி பூத்தின் ரிசிவரில்
அவரின் காதுபட
கதறல்களையும்,
அழுகுரல்களையும்
அனுப்பிக்கொண்டே இருந்தாலும்
அவர் கொஞ்சமும் வருத்தப்படுவதில்லை.
உறவுகளின் உடல் நோவு தீர்க்கச் சொல்லி
க்யூவில் நின்று
மன்றாடும்போது
அவர் பார்ப்பதுகூட இல்லை
மாலை போட்டு
படையல் வைத்து
உண்டியலில் காசு போட்டாலும்
அவரை மாற்றமுடிவதில்லை!
பக்கத்து தெரு அருள்மிகு மீனாட்சி அம்மனும்
அப்படித்தான்.
கடவுள்கள் கறாரானவர்கள்!
கடவுள்கள் நாத்திக்கர்கள்!
மனிதர்களைவிட
கொள்கைகள் மட்டும்தான்
முக்கியம் அவர்களுக்கு.
தாக்கம்: கல்பற்றா நாராயணின் முரண்டு,
மொழிபெயர்ப்பு: ஜெயமோகன்.


9 comments
Comments feed for this article
November 3, 2008 at 8:49 pm
Saravana Kumar MSK
கடவுளுக்கும் எனக்கும் வெகு தூரம்..
கவிதை நல்லா இருக்கு காந்தி.. அழகாவும் இருக்கு..
November 4, 2008 at 12:47 am
TKB Gandhi
@MSK
//கடவுளுக்கும் எனக்கும் வெகு தூரம்..//
எல்லோருக்கும்தான் இது பொருந்தும் இல்லிங்களா சரவணன்
//கவிதை நல்லா இருக்கு காந்தி.. அழகாவும் இருக்கு.//
தேங்க்ஸ் சரவணன்
November 18, 2008 at 5:35 am
Bee'morgan
சாதாரணமாத்தான் படிக்க ஆரம்பிச்சேன்.. ரொம்ப நல்லா இருக்குங்க.. முடிக்கும் போது பளிச் னு இருக்கு..
November 18, 2008 at 8:19 am
TKB Gandhi
@Bee’morgan
Thanks Bala
November 18, 2008 at 12:10 pm
Robin
கடவுள்கள் நாத்திக்கர்கள்!
November 18, 2008 at 12:18 pm
TKB Gandhi
ஆமாங்க ராபின், நம்ம ஊர் நாத்திகர்களெல்லாம் (தி.க. வகையறாக்கள்) இப்படித்தான பண்றாங்க அதான்
November 18, 2008 at 12:20 pm
அனுஜன்யா
காந்தி, நல்ல ஆழமான கவிதை. ‘கல்பற்றா நாராயணன்’ என்னும் மலையாளக் கவிஞரின் கவிதையை ஜெமோ மொழிபெயர்த்தது நினைவுக்கு வந்தது.
முரண்டு
இறந்தவர்கள்
பிடிவாதக்காரர்கள்.
கங்கை நீர் வாயில் விட்டாலும்
விழுங்க மாட்டார்கள்.
நாம்
சுவரில் தலைமுட்டி உடைத்துக் கொண்டாலும்
அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
அவர்களின் மடக்கிய விரல்களை
உடைக்காமல் பிரிக்க முடியாது நம்மால்.
மண்ணால் விழுங்கப்படுகையில்
தீ எரிந்து ஏறுகையில்
சற்று முகம் சுளிப்பதுகூட இல்லை.
அவர்கள் செய்ய மாட்டோம் என்று முடிவெடுத்தால்
முடிவெடுத்ததுதான்.
அனுஜன்யா
November 18, 2008 at 7:00 pm
TKB Gandhi
@அனுஜன்யா
நன்றி அனுஜன்யா. என்னோட இந்த கவிதையே ‘கல்பற்றா நாராயணன்’-னின் அந்த கவிதையோட தாக்கம்தாங்க! அந்த கவிதை ரொம்ப பிடிச்சிருந்ததால அதனோட தாக்கத்த தவிர்க்கமுடியல (தவிர்க்க விரும்பலைன்னு சொல்லலாம்)
ஜெமோ சைட்-ல தேடி எந்த கவிதை அதுன்னு நினைவு இல்லாம இங்க லிங்க் போடல. இப்போ கொடுத்திருக்கேன். நன்றி.
December 9, 2008 at 7:47 am
Pradeep
Chance-ye illa…
Miga miga miga arumai…
Kadavulargal naathigargal. Avaingalukku kolgaidhan mukkiyam…